தமிழில் தற்போது முன்னணியில் உள்ள நாயகிகள் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வெளியூர்களிலும் வெளி நாட்டிலுமாக பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இரண்டாம் நிலை யில் உள்ள இரு நாயகிகள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். நடிகை கேத்தரின் தெரசா புதுப்படம் ஒன்றில் சித்தார்த்துக்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சாய்சேகர் இயக்கும் இப்படத்தின் கதைக்களம் நகரத்துப் பின்னணியில் அமைந்திருந்தாலும் முடி வில் கிராமத்தை நோக்கி நகருமாம்.
காதல், அடிதடி காட்சி களுக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகிறது. படத் தின் முதற்கட்டப் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ள கேத்தரின் உற்சாகமாகக் காணப்படுகிறார். "இது திகில் படம் என்று தகவல் பரவி வருகிறது. ஆனால், ரசிகர்களின் கணிப்பு தவறாக இருக்கக்கூடும். இது எப்படிப்பட்ட படம் என்பது பரம ரகசியம். இயக்குநர் எங்களிடமே அந்த ரகசி யத்தைச் சொல்லவில்லை," என்று கேத்தரினும் மர்ம முடிச்சு களுடனேயே விவரம் சொல்கிறார்.