அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.10 என்ற அளவுக்கு (சிங்கப்பூர் வெள்ளி ஒன்றுக்கு 50.38 ரூபாய்) நேற்று வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியா வின் முக்கிய பொருளியல் அம்சங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தினால் என்று மில்லாத இந்தச் சரிவை இந்திய ரூபாய் எதிர்கொண்டுள்ளது. 2016ல் ஒரு டாலருக்கு 68.90 ரூபாய் என்றிருந்த படுமோச மான வீழ்ச்சியை நேற்றைய சரிவு தாண்டியுள்ளது. இந்தியா தனது எரிசக்தி தேவையில் 80 விழுக்காட்டை இறக்குமதி செய்வதால் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் இந்தியப் பொருளி யலை பெரிதளவில் பாதிக்கிறது.
அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 77 டாலராகி, கடந்த மூன்றாண்டுகளில் ஆக அதிகமான உயர்வை இந்த வாரம் எட்டியுள்ளது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள தடுமாற்றத்துடன் இந்திய இறக்குமதியாளர் கள், வங்கிகள் மத்தியில் உருவாகியுள்ள அதிகளவிலான டாலர் தேவை ஆகியவற்றின் காரணமாக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.