எஸ்எம்ஆர்டி ரயில் நிறுவனத் தின் உயர் அதிகாரியான ஆல் வின் கெக் யோக் பூனுக்கு, 51, 2வது முறையாக குடித்து விட்டு வாகனம் ஓட்டிய குற்றத் திற்காக நேற்று இரு வார சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு வாகனங்கள் ஓட்டவும் அவருக் குத் தடை விதிக்கப்பட்டது. ஏற்கெனவே கடந்த 2004 மார்ச் 11ல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக கெக் தண்டனை பெற்றவர். அண்மைய சம்பவத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி அதிகாலை 3.00 மணியளவில் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதற்காக அவர் பிடிபட்டார்.
மூச்சுக்காற்று சோதனையில் வரம்பு மீறி இரண்டு மடங்குக்கு மேல் ஆல்கஹால் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
எஸ்எம்ஆர்டியின் முன்னைய அதிகாரி ஆல்வின் கெக் யோக் பூன். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்