மின்-ஸ்கூட்டர் மோதி பெண் காயம்

புக்கிட் பாஞ்சாங்கில் மின்- ஸ்கூட்டர் மோதியதால் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவரது தலையிலும் கால் களிலும் காயங்கள் ஏற்பட்டதைக் காட்டும் படங்கள் ஃபேஸ்புக்கில் நேற்று வெளியாயின. செவ்வாய் இரவு 10.12 மணியளவில் போலிசுக்கு வந்த தகவலில் ஃபஜார் ரோட்டில் மின் ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர் நடை பாதையில் சென்று கொண்டிருந்த பெண் மீது மோதியதாகத் தெரி விக்கப்பட்டது.

இந்நிலையில் காயம் அடைந்த பெண்ணின் சகோதரி என்று தம்மை குறிப்பிட்ட ஜென் லோ என்பவர், மின்-ஸ்கூட்டரை ஓட்டி யவர் சம்பவ இடத்திலிருந்து உடனே ஓடி விட்டார் என்றார். இந்த விபத்து குறித்து தகவல் தெரிந்தவர்கள் சாட்சியமளிக்க முன்வருமாறும் அவர் கேட்டுக் கொண்டார். புளோக் 442 ஃபஜார் ரோடு வழியாக ஃபஜார் கடைத் தொகு திக்கு நடந்து சென்ற தமது சகோ தரி மீது பின்பக்கமாக மின் ஸ்கூட்டரில் வந்தவர் மோதி விட் டார் என்று செல்வி லோ சொன் னார்.

மின்-ஸ்கூட்டர் மோதியதால் காயம் அடைந்த பெண். ஃபேஸ்புக் படம்: ஜென் லோ

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!