மெக்சிகோ: ஜெர்மனியை 2-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியா தோற்கடித்ததை தென்- கொரியர்களைக் காட் டிலும் மெக்சிகோ காற்பந்து ரசிகர்களே கோலாகலமாகக் கொண்டாடினர். அவர்கள் அங்குள்ள தென்கொரிய தூத ர கத்தின் முன்பு ஒன்று கூடி தங்கள் மகிழ்ச்சியை ஆரவாரத் துடன் வெளிப்படுத்தினர்.
தூதரகம் உள்ள 'லோமாஸ் டி சப்பல்டெபெக்' பகுதியில் நூற்றுக் கணக்கானோர் திரண்டு வந்து மகிழ்ச்சியைக் கொண்டாடினர். இது குறித்துக் கூறிய தென் கொரியத் தூதரக அதிகாரி பியோங் யின் ஹான், இன்றைக்கு தென் கொரியர்களுக்கும் மெக்- சிகோ நாட்டவருக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்று அவர்கள் ஒன்றிணைந்து வெற்றிக் களிப்பை வெளிப்படுத்திய விதம் பற்றி கூறினார்.
கொண்டாட்டத்தின் உச்சக் கட்டத்தில் மெக்சிகோ ரசிகர்கள், கொரியத் தூதரக அலு வலக ஊழி யர் ஒருவரையும் ஒரு சிறுவனையும் (படம்) தோளில் தூக் கியவாறு, "கொரிய சகோதரனே, இப்போது நீயும் மெக்சிகோவைச் சேர்ந்த வனே," என்று அன்பொழுக வெற்றிமுழக்க மிட்டனர். இரு நாட்டு ரசிகர்களும் ஒருவருக் கொருவர் கட்டித்தழுவிக் கொண் டனர். தலைநகரில் வைக்கப்பட்டி- ருந்த மாபெரும் தொலைக் காட்சி- யில் வெற்றிக் கொண்டாட்ட காட்- சிகள் ஒளிபரப்பப்பட்டன.
மேலும் சமூக ஊடகங்களில் மெக்சிகோ மற்றும் கொரிய தேசியக் கொடிகளை ஒன்றிணைத்த படங்கள் பரவலாகப் பரிமாறிக் கொள்ளப்பட்டன.