உறுதியான தற்காப்பும் உச்ச தாக்குதலும்

சோச்சி: முதல் ஆட்டத்திலேயே மூன்று கோல்களை அடித்த தாக்குதல் ஆட்டக்காரர் இடம்பெற்றுள்ள அணியும் இதுவரை ஆடிய மூன்று ஆட்டங்களிலும் ஒரு கோல்கூட விட்டுத்தராத அணியும் ஒன்றை ஒன்று எதிர்த்தாடுவதால் உலகக் கிண்ணக் காற் பந்துக் களம் சூடுபிடித்துள்ளது. ஸ்பெயினுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 'ஹாட்ரிக்' கோலடித்த சோச்சி அரங்கிற்கு மீண்டும் திரும்புகிறார் போர்ச்சுகல் அணித்தலைவர் கிறிஸ்ட யானோ ரொனால்டோ. அதனால், உருகுவே அணியில் பல நட்சத்திர ஆட்டக்காரர்கள் இருந்தாலும் உலகின் சிறந்த ஆட்டக்காரரான ரொனால்டோவை கொண்டிருப் தால் இன்று பின்னிரவில் நடக்கவுள்ள ஆட்டத்தில் வென்று காலிறுதிக்கு முன்னேற தங்களுக்கே வாய்ப்பு அதிகம் என்கிறார் போர்ச்சுகல் தற்காப்பு ஆட்டக்காரர் செட்ரிக் சுவார்ஸ்.

ஆனாலும், இதுவரை நான்கு கோல்களை அடித்திருக்கும் ரொனால்டோ இன்றைய ஆட்டத்தில் கோலடிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது. ஏனெனில், இந்த உலகக் கிண்ணத் தொடரின் பிரிவு ஆட்டங்களில் ஒரு கோல்கூட விட்டுக் கொடுக்காத ஒரே அணி உருகுவேதான். அதற்குக் காரணம், டியேகோ ஹோடின், ஹோசே கிமினெஸ் என்ற இரு உலகத்தரமான தற்காப்பு வீரர்கள். இவ்விருவருமே ஸ்பெயினின் அட்லெட்டிகோ மட்ரிட் குழு சார்பாக ரியால் மட்ரிட்டின் ரொனால்டோவுடன் பலமுறை மோதியுள்ளனர்.

அதனால், ரொனால்டோவை எப்படிக் கட்டுப்படுத்து வது என்பதை அவர்கள் நன்றாக அறிந்திருப்பர். எதிரணியைக் கோலடிக்காமல் தடுப்பதில் கெட்டிக் காரர் ஹோடின். கடந்த பருவத்தில் அட்லெட்டிகோ மட்ரிட் குழு ஆடிய ஆட்டங்களில் 34ல் ஒரு கோல்கூட எதிரணியால் அடிக்க முடியவில்லை. அத்துடன், இந்த ஆண்டில் தான் ஆடிய ஆறு ஆட்டங்களிலும் உருகுவே அணி ஒரு கோலைக்கூட விட்டுத் தரவில்லை.

இதனால் முன்னாள் அர்ஜெண்டினா நட்சத்திரமான மரடோனா இவரை வானளாவப் புகழ்ந்துள்ளார். "ஹோடின் ஒரு காற்பந்து நட்சத்திரம். அவர் சிறப்பாகத் தற்காக்கிறார்; அணியைத் திறம்பட வழி நடத்துகிறார்; கோலடிக்கிறார்; பட்டங்களை வென்று தருகிறார். அதோடு, எல்லா ஆட்டங்களிலும் தவறாமல் இடம்பெறுகிறார்," என்று மரடோனா அண்மையில் தெரிவித்திருந்தார். காயம் காரணமாக ரஷ்யாவிற்கு எதிரான போட்டியில் விளையாடாத கிமினெஸ் உடல்நிலை தேறிவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!