கஸன்: உலகக் கிண்ணத்தை வெல் லும் வாய்ப்புள்ள அணிகளாக முன்னு ரைக்கப்பட்ட அணிகளுள் இரண்டான அர்ஜெண்டினாவும் பிரான்சும் கால் இறுதிக்கு முந்திய சுற்றிலேயே மோதுவதால் இப்போதே அரையிறுதிச் சுற்று போன்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்பார்த்த அளவிற்கு இதுவரை இவ்விரு அணிகளின் செயல்பாடும் அமையாததால் தங்களது உச்ச திறனை மீண்டும் எட்டி வெற்றியை ஈட்ட இரு அணிகளுமே கங்கணம் கட்டியுள்ளன.
அர்ஜெண்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரரான லயனல் மெஸ்ஸிக்கு இதுவே கடைசி உலகக் கிண்ணத் தொடராக இருக்கலாம் எனக் கூறப் படும் நிலையில், பிரிவு ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்று அவ்வணி பெரும் ஏமாற்றத்தை அளித்தது. கத்துக்குட்டியானாலும் கட்டுக் கோப்பான அணியாகத் திகழும் ஐஸ்லாந்திடம் 1-1 எனச் சமநிலை கண்ட அர்ஜெண்டினா, அதன்பின் குரோவேஷியாவிடம் 3-0 என்ற கோல் கணக்கில் தோற்றது இந்த உலகக் கிண்ணத் தொடரில் நிகழ்ந்த பேரதிர்ச்சிகளுள் ஒன்று.
கடைசித் தருணத்தில் மார்க்கோஸ் ரோஹோ அடித்த கோலால் நைஜீரி யாவை 2-1 என வென்று, ஒருவாறாக அடுத்த சுற்றில் நுழைந்த அவ்வணிக்கு இனிமேல்தான் கடும் சவால் காத்து இருக்கிறது.