புதிய இடங்களுக்கு மாற சிரமப்படும் விலங்கு காப்பகங்கள்

பாசிர் ரிஸ் ஃபார்ம்வேயிலுள்ள 20க்கும் அதிகமான விலங்குக் காப்பகங்கள், சுங்கை தெங்கா விலுள்ள 'தி அனிமல் லாட்ஜ்' என்ற புதிய வளாகத்திற்கு இடம் பெயர உள்ளன. பாரிசிஸ் ஃபார் முக்கான தொழிற்துறை மேம் பாட்டுத் திட்டங்கள் இந்த இடம் பெயர்தலுக்கான காரணம். நாய்கள், பூனைகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான ஆதர வற்ற செல்லப் பிராணிகளை புதிய இடத்திற்குக் கொண்டு செல்வதன் சிரமங்கள் ஒருபுறம். புதிய இடத்தால் காப்பக உரிமை யாளர்கள் எதிர்நோக்கும் அதிக செலவுகள் மற்றொருபுறம்.

இதுவரை, வாடகை கட்டாமல் இயங்கி வந்த காப்பகங்கள், இப் போது மாதத்திற்குப் பல்லாயிரம் வெள்ளி கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. வேறு சில காப்பகங்களுக்கு, தங்களது வாடகைகள் ஐந்து மடங்கு வரை உயர்ந்தன. இன்னும் எவ்வளவு காலம் தொடர்ந்து இயங்க முடியுமோ என்பது அந்தக் காப்பகங்களுக்கு கேள்விக்குறியாக உள்ளது. 'தி அனிமல் லாட்ஜ்' வளாகம், 7,000 விலங்குகளுக்கு இடம் இடமளித்துள்ளதாக வேளாண், உணவு கால்நடை மருத்துவ ஆணையம் தெரிவித்தது. நிலம், கட்டுமானம், பராமரிப்பு ஆகியவற்றுக்கானச் செலவை மீட்டுக் கொள்வதற்காக வாடகை களை 'தி அனிமல் லாட்ஜ்' பெறுவதாக ஆணையம் சொன்னது. TNP PHOTO: JONATHAN CHOO

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!