நியமன எம்.பி பதவிக்கு அரசு துரைசாமி பரிந்துரை

சிங்கப்பூர் துறைமுக ஊழியர் தொழிற்சங்கத்தின் பொதுச் செய லாளரான 50 வயது திரு அரசு துரைசாமியை நியமன நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தொழிலாளர் இயக்கம் பரிந்துரை செய்துள்ளது.

ஊழியர்களுக்கு மறுபயிற்சி அளித்து அவர்கள் மாற்றுத் திறன்கள் பெறுவதை திரு அரசு பெரிதும் ஆதரிப்பவர் என்று தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

தொழில்நுட்ப இடையூறு களுக்கு இடையே வேகமாக மாறி வரும் பொருளாதாரச் சூழலுக் கேற்ப தங்களை மாற்றிக்கொண்டு தொடர்ந்து தகுதியுள்ளவர்க ளாக விளங்க வேண்டும் என்பதில் அவர் நம்பிக்கை கொண்டுள்ளார். முக்கியமாக, தொடர்ந்து தன்னை மேம்படுத்திக்கொள்ளும் அவரே ஒரு முன்னுதாரணமாகவும் திகழ்கிறார் என்று என்டியூசி கூறியது.

மணமாகி ஒரு பிள்ளைக்குத் தந்தையான திரு அரசு, 1993இல் சிங்கப்பூர் துறைமுக ஊழியர் தொழிற்சங்கத்தில் சேர்ந்தார். 2014ல் சங்கத்தின் பொதுச் செய லாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். என்டியூசியின் மத்திய குழு உறுப் பினராக 2011, 2015ஆம் ஆண்டு களில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவருடைய தன்னலமற்ற, உறுதியான போக்கு ஒன்றியத்தின் உறுப்பினர்கள், சக ஊழியர்கள், நிர்வாகத்தினர் என அனைவரது மதிப்பையும் பெறச் செய்துள்ளது. தேசிய முத்தரப்புக் குழுக்கள், தேசிய சம்பள மன்றம், பொதுப் போக்குவரத்து மன்றம் ஆகிய அமைப்புகளில் பணியாற்றிய அனுபவமுடையவர் திரு அரசு.

அரசு துரைசாமி. படம்: என்டியுசி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!