சென்னை: நீதிமன்றத்தையும் தீர்ப்பையும் விமர்சித்த முன்னாள் எம்எல்ஏ தங்கத்தமிழ்செல்வனுக்கு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் அழைப்பாணை அனுப்பியுள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை பணம் பெற்று தீர்ப்பு வழங்கியதாக சென்னை உயர் நீதிமன்றத்தையும் தலைமை நீதிபதியையும் விமர்சித்தது குறித்து நேரிலோ அல்லது வழக் கறிஞர் மூலமாகவோ விளக்க மளிக்குமாறு தங்கத்தமிழ்ச்செல்வனை அந்த அழைப்பாணை கேட்டுக்கொண்டுள்ளது.
"அவரது தரப்பில் இருந்து இரண்டு வாரங்களில் நேரிலோ வழக்கறிஞர் மூலமாகவோ விளக்கமளிக்க வேண்டும். தங்கத்தமிழ் செல்வன் அளிக்கும் விளக்கத்தில் திருப்தி இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் தொடர நீதிமன்றத்திற்கு அரசு தலைமை வழக்கறிஞர் பரிந்துரைப் பார்," என நீதிமன்ற வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தமிழ்செல்வன். படம்: தமிழக ஊடகம்