போலிசுக்கு எதிராக பெண்கள் போர்க்கொடி

சென்னை: போலிசைக் கடுமையாக விமர்சித்த இரு பெண்களின் வழக்குகள் நேற்று முன்தினம் சென்னை சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டன. அவற்றில் தொடர்புடைய ஒரு பெண் சிறைவாசத்தைத் தொடர வும் மற்றொரு பெண் பிணையில் செல்லவும் பெண் நீதிபதி உத்தர விட்டார். சேலம் வீராணம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி வளர்மதி (24). இவர் சுற்றுச்சூழல் தொடர் பான பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று வருகிறார். சென்னை வடபழனியில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வளர்மதி போலிசை விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து வன் முறையைத் தூண்டியது உட்பட இரு பிரிவுகளின்கீழ் வளர்மதி மீது வடபழனி போலிசார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே, சேலம்=சென்னை பசுமை வழி சாலைத் திட்டத்தை எதிர்த்து அண்மையில் சேலம் ஆச்சாங் குட்டப்பட்டியில் அரசு அதிகாரி களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட் டார் வளர்மதி. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சேலம் போலிசார் அவரை கைது செய்தனர். வடபழனி வழக்கிலும் கைது செய்யப்பட்ட அவர் சேலத்திலி ருந்து சென்னை கொண்டுவரப்பட் டார். சைதாப்பேட்டை 17வது நீதி மன்ற நீதிபதி அங்காள ஈஸ்வரி முன் நிறுத்தப்பட்ட அப்பெண்ணை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

மற்றொரு வழக்கில், தூத்துக் குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் போலிசைக் கண் டித்து பெண் காவலர் உடையில் காணொளி பதிவு வெளியிட்ட திரைப்பட துணை நடிகை நிலானிக்கு இதே நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டு உள்ளது. சென்னை சாலிகிராமம் அஷ்ட லட்சுமி நகரைச் சேர்ந்த நிலானி (33) மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மாணவி வளர்மதி, நடிகை நிலானி. படங்கள்: தமிழக ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!