டெஹ்ராடுன்: ஆசிரியை ஒருவர் உத்தரகாண்ட் பாஜக முதலமைச்சர் திரிவேந்திரசிங் ரவத்தைச் சந் தித்து தன்னை உள்ளூர் பள்ளிக் கூடம் ஒன்றுக்கு பணி மாற்றம் செய்யக்கோரி பரிந் துரை செய்யும் படி கேட்டுக் கொண்டார். பின்னர் அவருக்கும் முதல மைச்சருக்கும் இடையேயான பேச்சு வார்த்தை காரசாரமாக மாறியது. அவர்களின் உரையாடல் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கருவியில் பதிவானது. பதிவான காணொளிக் காட்சியில் அந்த ஆசிரியர், முதல மைச்சரை நோக்கி ஆவேசத்துடன் பேசுவது தெரிகிறது.
இதனையடுத்து அந்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார். அத்துடன் அவர் தற்காலிகமாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். திரிவேந்திரசிங் ரவத் தலைநகர் டெஹ்ராடூனில் பொதுமக்களைச் சந்தித் துக் குறைகளைக் கேட்கும் நேரத்தின்போது இந்தச் சம்பவம் நடந்தது. உத்தர பகுகுணா என்ற அந்த ஆசிரியை உத்தர்காஷி என்னும் ஊரில் ஆசிரியையாக கடந்த 25 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர், மூன் றாண்டுகளுக்கு முன்னர் காலமானார். அதனையடுத்து அவர் தனது பிள்ளைகள் வாழும் உத்தரகாண்டின் தலைநகர் டெஹ்ராடுனுக்கு பணிமாற்றம் கோரி வருகிறார்.