போகோர்: இந்தோனீசியாவுடன் வலுவான உறவைக் கொண் டிருக்க மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் விருப்பம் தெரிவித் துள்ளார். தென் கிழக்கு ஆசியாவின் இரு நாடுகளும் இரு தரப்பு ஒத் துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும். இரு நாடுகளுக்கு இடையிலான நட்புணர்வு மேம் பட்டு நீடித்திருக்க வேண்டும்," என்று இந்தோனீசியாவில் போ கோரில் பேசிய மகாதீர் குறிப் பிட்டார்.
இரு நாடுகளும் ஒரே மாதிரி யான பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றன. உதாரணமாக 2030ஆம் ஆண்டிலிருந்து பனை எண் ணெய்யை எரிபொருளாகப் பயன் படுத்துவதை படிப்படியாக நிறுத்த ஐரோப்பிய சங்கம் முடிவு செய் துள்ளது. இதனால் பனை எண் ணெய்யை பெருமளவில் ஏற்றுமதி செய்யும் இந்தோனீசியாவும் மலே சியாவும் பாதிக்கப்படலாம். இந்நிலையில் பனை எண் ணெய்க்கு எதிரான பிரசாரத்தை முறியடிக்க இந்தோனீசியாவும் மலேசியாவும் சேர்ந்து செயல் படுவது அவசியம் என்று டாக்டர் மகாதீர் வலியுறுத்தினார்.
மலேசிய பிரதமர் மகாதீரை வரவேற்கும் இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோ. படம்: ஏஎஃப்பி