பேங்காக்: தாய்லாந்து குகைக்குள் சிக்கியிருக்கும் 12 இளையர் களையும் அவர்களுடைய பயிற்று விப்பாளரையும் மீட்கும் பணி நேற்று 6வது நாளாக தொடர்ந்தது. இந்நிலையில் பிரதமர் பிரயூட் சான்-ஓ-ச குகையை நேரில் பார்வையிட்டு உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆறுதல் கூறி னார். கடந்த சனிக்கிழமை அன்று 11 முதல் 16 வயது வரையிலான இளையர்களும் 25 வயது பயிற்று விப்பாளரும் காணாமல் போயி னர். சியாங் ராயில் உள்ள தாம் லுவாங் குகையை ஆராய முற் பட்டபோது அவர்கள் அதற்குள் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படு கிறது. வெள்ளம் அபாயமுள்ள பகுதி என்ற எச்சரிக்கை அறிவிப்பையும் மீறி இளையர்கள் குகைக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது. குகையின் நுழைவாயிலில் இளையர்களின் சைக்கிள்களும் காற்பந்து காலணிகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
காணாமல்போன இளையர்களின் குடும்பத்தினரைச் சந்தித்த பிரதமர் பிரயூட் சான். படம்: ஏஎஃப்பி