'அவள்', 'கம்மார சம்பவம்', 'சைத் தான் க பச்சா' படங்களுக்குப் பிறகு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ள நடிகர் சித்தார்த், கேத்ரின் தெரசாவுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கவுள்ளார் என்பது முன்பே தெரிந்த தகவல்தான். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் சேகர் இயக்கும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூலை 13ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது.
தொடர்ந்து 10 நாட்கள் நடை பெறும் முதல்கட்டப் படப்பிடிப்பில் நாயகி கேத்ரின் தெரசா நடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. மேலும் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை சென்னை, புதுச் சேரியில் நடத்த திட்டமிட்டிருப்ப தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்தார்த், கேத்ரின் தெரசா இருவரும் தெலுங்கு ரசிகர் களுக்கு நன்கு பரிச்சயமான வர்கள் என்பதால் தெலுங்கிலும் இப்படம் வெளியீடாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.