டிரிபோலி: அகதிகளை ஏற்றிவந்த ஒரு படகு லிபியா அருகே கடலில் மூழ்கியதில் மூன்று குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்ததாக கடலோர பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். அந்தப் படகில் அகதிகள் 120 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் 16 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் இன்னும் 100 பேரைக் காணவில்லை என்று லிபியப் படையினர் தெரிவித் துள்ளனர்.
கடல் நீரில் மூழ்கி அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அகதிகள் பலரை ஏற்றிக்கொண்டு தலைநகர் டிரிபோலியிலிருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்ட படகு சிறிது தொலைவு வரை சென்றதும் படகு என்ஜின் வெடித்து தீப் பிடித்துக்கொண்டதாகவும் அத னால் படகில் ஓட்டை ஏற்பட்டு தண்ணீர் உள்ளே புகுந்ததால் அப்படகு மூழ்கியதாகவும் உயிர் பிழைத்தவர்கள் கூறியுள்ளனர். தன்னுடன் படகில் வந்த ஏமன் நாட்டைச் சேர்ந்த நண்பர்கள் எவரும் உயிர் பிழைக்கவில்லை என்று 26 வயது இளைஞர் ஒருவர் கூறினார்.
லிபிய கடல் பகுதியில் மூழ்கிய ரப்பர் படகிலிருந்து காப்பாற்றப்பட்ட குடியேறிகள். படம்: ஏஎஃப்பி