சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், தனது சலுகைக் கட்டணத்திற்கான தகுதி அடிப்படைகளை இன்று முதல் மாற்றுகிறது. இதன் மூலம் மேலும் பல வசதி குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்கள் பயன் அடைய முடியும். சிண்டா வின் கட்டணத்துக்குரிய திட்டங் களுக்கு இந்தப் புதிய மாற்றங்கள் செயல்படும். புதிய மாற்றங்களின்படி, பங் கேற் போரின் தனிநபர் குடும்ப வருமானம் $1,000க்குக் கீழ் இருந்தால் சிண்டாவின் திட்டங் களுக்கு முழுக் கட்டண விலக்கு கொடுக்கப்படும். தனிநபர் குடும்ப வருமானம் $1,001க்கும் மேல் இருந்தால், ஒவ்வொரு திட்டத்தி ற்கும் $10 கட்டணம் செலுத் தினால் போதும்.
சிண்டாவின் 'ஸ்டெப்' துணைப் பாட வகுப்பு அல்லது 'டீச்' திட்டம் போன்ற துணைப்பாடத் திட்டங் களில் சேரும் மாணவர்கள், எத்த னை பாடங்களில் சேர்ந்தாலும் ஆண்டு முழுவதும் கட்டணமாக $10 மட்டும் செலுத்தினால் போதும். இதற்கு முன் இருந்த கட்டணத் திட்டத்தின் கீழ், தனிநபர் குடும்ப வருமானம் $650க்கும் கீழ் இருக் கும்போதுதான், முழுக் கட்டண விலக்கிற்குத் தகுதி பெற முடியும். $650க்கும் $1,000க்கும் இடையே தனிநபர் குடும்ப வருமா னம் உடை யவர்களுக்குக் குறிப் பிட்ட அளவி ற்கு சலுகை வழங்கப்பட்டது.
"பெற்றோர்கள், மாணவர்களின் தேவைகளை சிண்டா மனதில் கொண்டிருக்கிறது. எல்லா மாண வர்களுக்கும் கட்டுப்படியான கட்டண த்தில் துணைப்பாடம் பெறும் வாய்ப்பு இருக்கவேண்டும். குடும்பச் சூழலால் தேவையான கல்வி உதவி கிடைக்காமல் போய்விடக்கூடாது. "இந்தப் புதிய கட்டண மாற்றங் களால் மேலும் நிறைய பெற்றோர்க ள், தங்கள் பிள்ளைகளைச் சிண் டாவின் 'ஸ்டெப்' துணைப்பாட வகுப்பு களில் சேர்ப்பார்கள் என்று நம்பு கிறோம்," என்றார் சிண்டா வின் தற்காலிகத் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரன்.