இர்ஷாத் முஹம்மது
குழந்தைகளின் தாய்மொழி ஆற் றலுக்கான அடித்தளத்தை அமைப் பதில் பாலர்பள்ளி தாய்மொழி ஆசிரியர்கள் மிகப் பெரிய பங்கை ஆற்றுகின்றனர் என்று பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, நிதி இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா கூறியுள்ளார். தமிழ் மொழி கற்றல், கற்பித்தல் மூலமும் வகுப்பறைகளில் தமிழ் மொழியை உயிர்ப்பிப்பதன் மூல மும் நம் பாரம்பரியத்தை நிலை நாட்ட தமிழாசிரியர்கள் மாபெரும் பங்குவகிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
பாலர் பள்ளி தமிழாசிரியர் களுக்கு மரபையும் பண்பாட்டையும் போற்றுதல் எனும் கருப்பொருளில் 'ஆடுவோமே! கொண்டாடு வோமே!' கலந்தாய்வரங்கம் நேற்று நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில் அமைச்சர் இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ஆடல், பாடல், விளையாட்டு, கற்றல் பயண அனுபவம், கலந் துரையாடல் எனப் பல அங்கங்க ளுடன்கூடிய சுவையான கலந் தாய்வரங்க நிகழ்ச்சி கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஏற்பாட்டில் நேற்று உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது. பாலர்பள்ளி மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட 'தேன்சிட்டு' செயலியை அமைச்சர், பாலர் களுடன் இணைந்து தொடங்கி வைத்தார்.
'ஆடுவோமே! கொண்டாடுவோமே!' கலந்தாய்வரங்கில் மாணவர்களுக்கு மகிழ்வூட்டும் வகையில் கற்பிப்பது பற்றி பாலர்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிலரங்கு, நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. படம்: திமத்தி டேவிட்