பூமலையில் இனம்சார்ந்த தோட்டம்

தென்கிழக்காசிய மக்கள் உள்ளூர் செடிகளைப் பயன்படுத்திய முறை பற்றி அறிந்துகொள்ள ஏதுவாக பூமலையில் புதிய இனம்சார்ந்த தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 18 மாதங்கள் நடந்த கட்டுமான வேலைக்குப்பின், $5.8 மில்லியன் செலவில் கட்டப்பட்ட இந்தத் தோட்டம் நேற்று திறக்கப் பட்டது. ஒரு ஹெக்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்தத் தோட்டத் தில் தென்கிழக்காசிய மக்களால் மருத்துவம், கலாசாரம், கைவினை நோக்கங்களுக்காக பயன்படுத்தப் பட்ட 300க்கும் மேலான செடி வகைகள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

பாதாம் பருப்பின் சுவைகொண்ட பழத்தைத் தரும் 'கத்தபங்' என்ற கடல் பாதாம் மரம், குழந்தைப் பேற்றுக்கும் அதன்பின் உடல் தேறுவதற்கும் உதவும் இலைக ளைக்கொண்ட 'அகார் ஃபாத் திமா' செடியும் இவற்றுள் உண்டு. வரலாற்றில், குறிப்பாகத் தங்கள் வட்டாரத்தில் காணப்படும் செடி கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதைப் பற்றி மக்கள் அறிந்துகொள்வதே இனம்சாந்த தோட்டத்தின் நோக்கம் என்று பூமலையின் மேம்பாட்டு இயக்குநர் திருவாட்டி எங் யுயின்-மே கூறினார்.

மேலும் செய்திகளுக்கு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!