மாஸ்கோ: முன்னாள் வெற்றியாள ரான ஸ்பெயினை எதிர்த்தாடுவ தால் உலகக் கிண்ணத் தொடரை ஏற்று நடத்தும் ரஷ்யா இன்றைய காலிறுதிக்கு முந்திய சுற்று ஆட் டத்தைக் கிட்டத்தட்ட இறுதிப் போட்டி போலவே கருதி களம் இறங்கவுள்ளது. தொடக்க ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியாவைப் புரட்டியெடுத்த அதே லுஸ்னிகி அரங்கிற்குத் திரும்புவதாலும் கிட்டத்தட்ட 80,000 ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் ஆடவிருப்பதாலும் ரஷ்ய வீரர்கள் மிகுந்த உத்வேகத்துடன் உள்ளனர்.
அதோடு, கிண்ணம் வெல்ல வாய்ப்புள்ள அணிகளுள் ஒன்றாக கூறப்படும் ஸ்பெயின் அணி, தொடக்க சுற்றில் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப ஆடாததும் ரஷ்ய அணியினர் மத்தியில் வெற்றி நம்பிக்கையை அதிகரித்துள்ளது. 2008 யூரோ அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயினுடன் மோதிய ரஷ்ய அணியில் இடம்பெற்றிருந்த தற்காப்பு ஆட்டக்காரரான செர்கே இக்னாஷெவிச், 38, ஸ்பெயின் அணி ஆடும் பாணியில் பெரிய மாற்றமில்லை என்கிறார். "முந்தைய ஆண்டுகளில் ஆடி யதைப் போலவே இப்போதும் ஸ்பெயின் அணி ஆடி வருகிறது. அவ்வணியின் தற்காப்பு வீரர்களி டையே பெரும் இடைவெளி காணப் படுகிறது. அதுவே அவர்களின் பலவீனம். அதைப் பயன்படுத்திக் கொள்ள முற்படுவோம்," என்றார் இக்னாஷெவிச். ஸ்பானிய தற்காப்பு ஆட்டக் காரரான தியாகோவும் அதை ஒப்புக்கொள்கிறார்.