குமாரசாமி அரசைக் கவிழ்க்க மத்திய கட்சிகள் தீவிரம்

பெங்களூரு: கர்நாடகாவில் மஜத -காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தொடர்ந்து குழப்பம் நிலவி வரு வதால் ஆட்சி நீடிக்குமா என சந் தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாஜக மாநில தலைவர் எடியூரப்பா அவசர ஆலோசனை நடத்தினார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் மஜத மாநில தலைவர் குமாரசாமி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறார். இந்நிலையில், முதல்வர் குமாரசாமி புதியதாக பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதனை மீறி குமாரசாமி ராகுல் காந்தியின் ஒப்புதலைப் பெற்று இந்த வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய முயன்று வருகிறார். இதனால் அதிருப்தி அடைந்த சித்தராமையா ஓய்வு எடுப்பதாகக் கூறி மங்களூருவுக்கு சென்றார். அங்கு தனது ஆதரவு அமைச் சர்கள், எம்எல்ஏக்கள் ஆகி யோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தியது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் குழப்பம் நீடிக்கும் நிலையில் பாஜக மாநில தலைவர் எடியூரப்பா அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவை அண்மை யில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் பெங்களூருவில் நேற்று முன்தினம் எடியூரப்பா தலைமையில் மூத்த தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மேலும் செய்திகளுக்கு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!