தனி அறையில் கதறிய மஞ்சிமா மோகன்

'அச்சம் என்பது மடமையடா', 'சத்ரியன்', 'இப்படை வெல்லும்' படங்களில் நடித்திருப்பவர் மஞ்சிமா மோகன். இவர் நடித்திருந்த 'சத்ரியன்' படத்தின் தோல்விக்காக தனி அறையில் கதறி அழுததாக அண்மையில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். "அந்தப் படம் வெளியானபோது மிகவும் ஆர்வமாக முதல்காட்சியைத் தியேட்டரில் சென்று பார்த்தேன். படத்துக்குப் பெரிய வரவேற்பு கிடைக்காது என்று தெரிந்ததும் வீட்டில் தனி அறைக்குச் சென்று கதறி அழுதேன். அடுத்து வெளியான படமும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. தற்போது மலையாளத்தில் 'ஜாம் ஜாம்' என்ற படத்தில் நடித்து வருகிறேன். இந்தியில் கங்கனா ரணாவத் நடித்த 'குயின்' படத்தின் மறுபதிப்பாக இது உருவாகிறது. இதில் வரும் கதாபாத்திரம் எனது நிஜ குணத்தை பிரதிபலிப்பதுபோல் உள்ளது. எனது திரையுலக வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க படமாக இது இருக்கும்," என்றார் மஞ்சிமா மோகன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!