திருச்சி: அண்மையில் நடந்த அழகிப் போட்டியில் 'மிஸ் இந் தியா' அழகியாக மகுடம் சூடிய அனு கீர்த்திவாஸ் தனது சொந்த ஊரான திருச்சிக்கு வந்தார். அங்கு அவருக்கு ஏராளமான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அனுகீர்த்தி வாஸ், "உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டு உலக அழகிப் பட்டத்தை வெல்வதை எனது லட்சியமாகக் கொண்டுள்ளேன்," எனத் தெரி வித்தார். உலக அழகிப் போட்டியில் இந் தியா சார்பில் பங்கேற்கப் போவ தாகவும் அனுகீர்த்தி கூறினார். 'மிஸ் இந்தியா' அழகிப் பட்டம் வென்றபிறகு முதல்முறையாக நேற்று முன்தினம் திருச்சி, காட் டூர், சரஸ்வதி நகரில் உள்ள சொந்த வீட்டிற்கு வந்த அனு கீர்த்திக்கு அப்பகுதி மக்கள் திர ளாக வந்து வரவேற்று வாழ்த்தினர். அவர் படித்த பள்ளி விழாவிலும் அனுகீர்த்தி பங்கேற்றார். மக்களின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்ட அவர், அவரது தாயார் செலினா, தந்தை பிரசாத், பாட்டி கோமளாவிடம் ஆசி பெற்ற பின் மீண்டும் சென்னை புறப்பட்டு சென்றார்.
'மிஸ் இந்தியா' அழகிப் பட்டம் வென்று திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய அனுகீர்த்தி வாசுவுக்கு அவரது தாயார் செலினா முத்தமிடுகிறார். படம்: ஊடகம்