சிலேத்தாரை நோக்கிச் செல்லும் டர்ஃப் கிளப் அவென்யூவில் நேற்று முன்தினம் மண் லாரி, சறுக்கி ஒருபக்கமாகக் கவிழ்ந்தது. அதிலிருந்து கொட்டிய மண், மூன்று தடங்கள் கொண்ட அந்த சாலையின்மீது இறைந்துகிடந்த தாகச் சொல்லப்பட்டது. சம்பவம் பற்றிய தகவல் அன்றைய தினம் பிற்பகல் 1.30 மணிக்குக் கிடைத்ததாக போலி சார் தெரிவித்தனர். விபத்தில் சிறிய காயமடைந்த ஓர் ஆடவர், மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகக் குடி மைத் தற்காப்புப் படை கூறியது. லாரி ஒரு பக்கமாக கவிழ்ந்து கிடந்ததைக் காட்டும் காணொளி ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவேற்றப் பட்டது. சாலை முழுவதும் மண் இறைந்துகிடப்பதைக் காணொளி காட்டியது. லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நேர்ந்ததாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் குறிப்பிட்டது.
படம்: FACEBOOK/ALEX SOO