‘தோற்றவர்களுடன் கைகோப்பேன்’

கோலாலம்பூர்: அம்னோ கட்சித் தேர்த லில் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்ட அஹமட் ஸாஹிட் ஹமிடி தம்மை எதிர்த்துப் போட்டியிட்டவர்களுடன் கைகோத்து அவர்களுடைய யோச னைகளை ஏற்று கட்சியின் பெரு மையை உயர்த்தப்போவதாக சூளு ரைத்துள்ளார். திரு ஸாஹிட், 190 அம்னோ பிரிவுகளில் 99 பிரிவுகளின் ஆதர வைப் பெற்றுள்ளார். ஒரு பிரிவில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. அவருக்கு 90,000க்கும் மேல் வாக்குகள் கிடைத்தன. இது மொத்த வாக்குகளில் 42 விழுக்காடு. இது, தலைமை பதவியில் மாற்றம் வேண்டும் என்பதையே புலப்படுத்துகிறது.

திரு கைருலுக்கு 190 வாக்குகளில் 61 வாக்குகள் கிடைத்தன. மூன்றாவது வேட்பாளரான ரஸ்லீக் ஹம்சா 30 வாக்குகளை மட்டுமே பெற்றார். தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட மற்ற இரண்டு வேட்பாளர்களுக்கு வாக்குகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக சனிக்கிழமை அன்று பேசிய திரு ஸாஹிட், அம்னோ கட்சி சீரமைக்கப்பட்டு பலப்படுத்தப்படும் என்றார். உச்சமன்ற குழுவுக்குத் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் பேசி கட்சி சீரமைக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!