நோம்பென்: கம்போடியாவில் கையால் நெய்யப்பட்ட நீளமான கழுத்துத் துண்டு கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது. 'கிராமா' என்று கெமர் மொழியில் அழைக்கப்படும் கழுத்துத் துண்டின் மொத்த நீளம் 1,149.8 மீட்டர். அகலம் 88 செ.மீட்டர். கழுத்துத் துண்டு களை பாரம்பரியமாக தயாரித்து வரும் இருபது சமூகத்தினர் சேர்ந்து ஐந்து மாதங்களில் இந்த கைத்தறி கழுத்துத் துண்டை உருவாக்கியுள்ளனர். இருபதா யிரம் பேர் கூடியிருந்த நிகழ்ச்சி யில் புதிய கழுத்துத் துண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ள தாக அந்நிறுவனத்தின் அதிகாரி சுவாப்னில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
கின்னஸ் சாதனைப் படைத்த கழுத்துத் துண்டு. படம்: ஏஎஃப்பி