டல்லாஸ்: ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு 500,000 டாலர் வழங்கிய மருத்துவர் திருஞானசம்பந்தன், 200,000 டாலர் வழங்கிய பால்பாண்டி ஆகியோருக்கு விருது வழங்கி அமெரிக்க தமிழ்ச்சங்கம் சிறப்பித்தது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் ஜூன் 29ஆம் தேதிமுதல் ஃபெட்னா அமைப்பின் (FETNA) 'தமிழர் கலைவிழா' நடந்தது.
அது நேற்று முடிந்தது. வடஅமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையும் மெட்ரோ ப்ளக்ஸ் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய அந்த விழாவில் உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்கள், பேச்சாளர்கள், கலைஞர்கள் என 5,000 பேர் பங்கேற்றனர். அந்த விழாவில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டதற்கான வெற்றி விழா கொண் டாடப்பட்டது. விருது பெற்றபின் பேசிய பால்பாண்டி, "நாங்கள் இங்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு வந்தபோது தமிழர்கள் என 10 பேர் இருந்தோம். ஆனால் இன்று 10,000 பேர் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது," என்றார்.