இளம் போலிஸ் அதிகாரிகளை மானபங்கம் செய்தவருக்குச் சிறை

தனக்குக் கீழ் பணியாற்றிய அதிகாரிகளை மானபங்கம் செய்த போக்குவரத்து போலிஸ் ஆய்வாளர் முகமது தவ்ஃபிக் அபு பக்காருக்கு (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) 16 மாதம் ஒன்பது வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மானபங்கம் தொடர்பான ஆறு குற்றங்களை 56 வயது தவ்ஃபிக் செய்ததாக மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்தது. ஐந்தாவது அதிகாரி ஒருவரை அவர் மானபங்கப்படுத்தியதாகக் குறிப்பிடும் மற்றொரு குற்றச்சாட்டு கைவிடப்பட்டது. ஜனவரிக்கும் செப்டம்பருக்கும் இடையே அவர் அந்தக் குற்றங்களைச் செய்தார். 1998ஆம் ஆண்டில் போக்குவரத்துப் போலிஸ் படையில் சேர்ந்த அவர், 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 10ல் இடைநீக்கம் செய்யப்பட்டார். 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 12ல் தவ்ஃபிக், தேசிய சேவையில் உள்ள 21 வயது அதிகாரியை தனது வீட்டிற்கு அழைத்து அவரை மானபங்கம் செய்தார். போக்குவரத்து போலிஸ் தலைமையகத்தில் அவர் மூன்று இளம் அதிகாரிகளையும் மானபங்கம் செய்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!