கோலாலம்பூர்: மலேசியாவின் பக் கத்தான் ஹராப்பான் அரசாங்கத் தின் அமைச்சரவையில் நேற்று 13 அமைச்சர்கள் பதவியேற்றனர். கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பக் கத்தான் ஹரப்பான் கூட்டணியில், அப்போது 13 அமைச்சர்கள் பதவி யேற்றுக் கொண்டனர். அதன் பிறகு நேற்று காலை விரிவாக்கப்பட்ட மலேசிய அமைச் சரவையில் 13 புதிய அமைச்சர் களும் 23 துணை அமைச்சர்களும் இஸ்தானா நெகராவில் பேரரசர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். புதிய அமைச்சர்களின் நிய மனத்தில் பிகேஆர் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டது.
புதிய அமைச்சரவையில் இளை யர், விளையாட்டுத்துறை அமைச் சராக நியமிக்கப்பட்டுள்ள 26 வயது சையத் சித்திக் மலேசியா வின் ஆக இளவயது அமைச்சர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் மூவார் தொகுதியில் பெர்சாத்து கட்சி சார்பில் போட் டியிட்டு வெற்றி பெற்ற இவர் சட்டக்கல்வியில் பட்டம் பெற்றுள் ளார். சித்திக்கிற்கு அடுத்த இள வயது அமைச்சரான 35 வயது இயோ எரிபொருள், தொழில்நுட்ப, அறிவியல், வானிலை மாற்ற விவகாரங்களுக்குப் பொறுப்பேற் றார்.
மூவார் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 வயது சையத் சித்திக் மலேசியாவின் ஆக இளவயது அமைச்சரானார். படம்: தி ஸ்டார்