புதுடெல்லி: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அணு உலையை மூட உத்தர விட முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. கூடங்குளம் அணு உலை அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கு இன்றிச் செயல்படுவதாகவும், இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும் உச்சநீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் அணு உலையை மூடவேண்டும் என இவ்வழக்கைத் தொடுத்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்தி இருந்தது. இந்த வழக்கு நேற்று விசா ரணைக்கு வந்தது.
அப்போது அணு உலையில் போதுமான பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வில்லை என்றும் அங்கே அணுக் கழிவுகளை அகற்றும் வசதி இல்லை என்றும் பூவுலகின் நண் பர்கள் அமைப்பு சார்பாக முன்னி லையான வழக்கறிஞர் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் வழக்கறிஞர், அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கு அமைக்க 4 ஆண்டுகள் கால அவகாசம் வேண்டும் என்றார். சேமிப்புக் கிடங்குக்கான கட்டு மானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். இதற்கு மனுதாரர் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் செவி மடுத்த உச்ச நீதிமன்றம் கூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிட இயலாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தது. மேலும் அணுக்கழிவுச் சேமிப்புக் கிடங்கைக் கட்டி முடிப் பதற்கான கால அவகாசத்தையும் 2022ஆம் ஆண்டு வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.