'வட சென்னை' படத்தின் இசைப் பணிகள் முடிவுக்கு வந்திருப்பதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், இந்தப் படத்துக்காக துடிப்பும் வேடிக்கையும் அடங்கிய வட்டார குத்துப்பாடலுடன் திரும்ப வருவதில் மிகுந்த மகிழ்ச்சி என்று அவர் தெரிவித்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் 'வட சென்னை' படத்தில் அவரது ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
"இயக்குநர் வெற்றிமாறனின் இந்த பிரம்மாண்ட படைப்பில் நானும் ஒருவனாக இருப்பதை கௌரவமாகக் கருதுகிறேன். கடுமையாக உழைத்துள்ள தனுஷுக்கு பாராட்டுகள்," என்று சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். 'வட சென்னை' படம் தனது திரைப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் தனுஷ். இதில் இவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் ரசிகர்களால் நிச்சயம் வரவேற்கப்படும் எனப் படக்குழுவினரும் கூறியுள்ளனர்.