மாஸ்கோ: குரோவேஷியாவின் கோல்காப்பாளர் டேனியேல் சுபசிச் டென்மார்க்கின் மூன்று பெனால்டிகளைத் தடுத்து நிறுத்தி தமது குழுவின் வெற்றிக்கு முக்கிய காரண மானார். டென்மார்க் கோல்காப்பாளர் கோஸ்பர் ஷர்மைக்கலும் சளைத்தவர் அல்ல. அவர் இரண்டு பெனால்டிகளைத் தடுத்து நிறுத்தினார். ஆனால் குரோவேஷியாவின் வெற்றியை அவரால் தடுக்க முடியவில்லை.
நேற்று அதிகாலை நடை பெற்ற காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் குரோவேஷியாவும் டென்மார்க்கும் மோதின. ஆட்டம் தொடங்கி சில வினாடிகளிலேயே டென்மார்க் கோல் போட்டு குரோவேஷி யாவை அதிர்ச்சியில் உறைய வைத்தது. குரோவேஷிய குழுவின் பெனால்டி எல்லைக்குள் அனுப்பப்பட்ட பந்துக்காக இருதரப்பு வீரர்களும் முட்டி மோதினர். ஆனால் பந்தை ஒருவழியாக வலைக்குள் அனுப்பினார் டென்மார்க்கின் மெத்தாயஸ் யோஹென்சன். இருப்பினும், துவண்டு விடாமல் போராடிய குரோ வேஷியா அடுத்த மூன்று நிமிடங்களில் ஆட்டத்தைச் சமன் செய்தது.
தமது பெனால்டி எல்லை யிலிருந்து பந்தை அப்புறப்படுத்த முயன்றார் டென்மார்க்கின் ஹென்ரிக் டால்ஸ்கார்ட். ஆனால் அது சக வீரர் கிறிஸ்டன்சன் மீது பட்டு குரோவேஷியாவின் மாரி யோ மட்சுகிச்சிடம் சென்றது. வந்த வாய்ப்பை மட்சுகிச் நழுவவிடவில்லை. அவர் அனுப் பிய பந்து வலையைத் தொட்டது. அதனைத் தொடர்ந்து இரு குழுக்களும் எவ்வளவு முயன்றும் அவற்றால் கோல் போட முடிய வில்லை. கூடுதல் நேரம் முடிய ஏறத்தாழ நான்கு நிமிடங்கள் மட்டும் இருந்தபோது குரோவேஷியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மோட்ரிச் எடுத்த பெனால்டியை கேஸ்பர் ஷர்மைக்கல் தடுத்து நிறுத்தினார். ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிய வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷுட்அவுட் நடத்தப் பட்டது.
இதில் குரோவேஷியாவின் கையோங்கியது. கூடுதல் நேரத் தில் கோட்டைவிட்ட மோட்ரிச் இம்முறை கோல் போட்டார். தமது வீரர்கள் எடுத்த பெனால் டிகளை குரோவேஷிய கோல் காப்பாளர் சுபசிச் பாய்ந்து தடுப்பதைப் பார்த்து டென்மார்க் ரசிகர்கள் செய்வதறியாது தவித்தனர். இறுதியில் 3-2 எனும் கோல் கணக்கில் குரோவேஷியா வாகை சூடியது. இதன் மூலம் அது காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. காலிறுதியில் அது போட்டியை ஏற்று நடத்தும் ரஷ்யாவுடன் மோதும்.
(முதல் மேல்படம்) டென்மார்க் வீரரின் பெனால்டியைத் தடுத்து நிறுத்தும் குரோவேஷிய கோல்காப்பாளர் சுபசிச். குதூகலத்தில் குரோவேஷிய வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்