போராடி வென்ற பெல்ஜியம்

மாஸ்கோ: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஜப்பா னுக்கும் பெல்ஜியத்துக்கும் இடையே நேற்று அதிகாலை நடைபெற்ற காலிறுதிக்கு முந்திய ஆட்டத்தை யாரும் இனி மறக்க மாட்டார்கள். ஆட்டத்தில் நிகழ்ந்தவை காற்பந்து ரசிகர்களின் மனக் கண்களில் என்றென்றும் வந்து வந்து போகும் அளவுக்கு இரு அணிகளின் அதிரடி ஆட்டம் அமைந்தது. இரண்டு கோல்கள் முன்னிலை வகித்து காலிறுதிச் சுற்றின் வாசல் வரை சென்ற ஜப்பானுக்குக் கடைசியில் பெருத்த ஏமாற்றம். பெல்ஜியத்தின் விட்டுக் கொடுக்கா மனப்பான்மையும் இறுதி வரை போராடும் குணமும் அதற்கு வெற்றியைத் தேடித் தந்தது. 3=2 எனும் கோல் கணக்கில் பெல் ஜியத்துக்குச் சாதகமாக ஆட்டம் முடிந்தபோது 90 நிமிடங்களில் இப்படி எல்லாம்கூட நடக்குமா என்று கேட்கத் தோன்றுவது இயல்புதான். முற்பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி முடிய பிற்பாதி ஆட்டத் திலாவது கோல்கள் போடப்படுமா என்ற ஏக்கத்துடன் ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். உலகெங்கும் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர் களின் கோல் ஆசை பிற்பாதி ஆட்டம் தொடங்கி மூன்று நிமிடங் களில் நிறைவேறியது.

கடைசிக்கட்டத்தில் வெற்றி கோலைப் போடும் பெல்ஜியத்தின் நேசர் சேட்லி. பந்து வலைக்குள் செல்வதைத் தடுக்க ஜப்பானின் கோல்காப்பாளரும் தற்காப்பு ஆட்டக்காரர்களும் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கிண்ணத்தின் காலிறுதிக்கு முன்னேற தமது அணிக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பு பறிபோனதை அடுத்து தேம்பித் தேம்பி அழும் ஜப்பானிய ரசிகர். தோல்வியிலும் கண்ணியத்தைக் கைவிடா ஜப்பானியர்கள், தங்களுக்காக ஒதுக்கப்பட்ட ஆடை மாற்றும் அறையைச் சுத்தம் செய்து ரஷ்ய மொழியில் விடைபெற்றுக்கொண்டனர். படங்கள்: ஏஎஃப்பி, டுவிட்டர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!