மாஸ்கோ: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறு திக்கு பிரேசில் தகுதி பெற் றுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அது 2=0 எனும் கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது. தோல்வியைத் தழுவிய மெக் சிகோவின் உலகக் கிண்ணப் பயணம் ஒரு முடிவுக்கு வந்தது. இடைவேளையின்போது இரு தரப்பும் கோல் ஏதும் போடாமல் சமநிலையில் இருந்தன. பிரேசிலின் கோல் முயற்சிகளை மெக்சிகோ கோல்காப்பாளர் மிகச் சிறப்பாகத் தடுத்து நிறுத்தினார். ஆனால் பிற்பாதியில் நிலைமை மாறியது. ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் பிரேசிலின் முதல் கோலை அதன் நட்சத்திர வீரர் நெய்மார் போட்டார். வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் இரு குழுக்களும் விளையாடியதால் ஆட்டம் காரசாரமானதாக இருந்தது.
மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய ஃபிர்மினோ ஆட்டத் தின் 88வது நிமிடத்தில் கோல் போட்டு பிரேசிலின் வெற்றியை உறுதி செய்தார். இந்நிலையில், ஆட்டத்தின் போது மெக்சிகோ ஆட்டக்காரர் ஏதும் செய்யாமலேயே அவர் தம்மைக் காயப்படுத்திவிட்டார் என்பது போல தரையில் விழுந்து துடித்தார் நெய்மார். இது உலகெங்கும் உள்ள ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எதிர் தரப்பினருக்கு மஞ்சள் அல்லது சிவப்பு அட்டை கிடைக்க வைக்கவோ அல்லது தமது குழுவுக்கு பெனால்டி கிடைக்கவோ இவ்வாறு நேர்மையற்ற முறையில் நடந்துகொள்வது நெய்மாருக்கு வாடிக்கையாகிவிட்டது என்று கண்டனக் குரல்கள் எழுந் துள்ளது.
இம்மாதிரியான நேர்மை அற்ற செயல்கள் காற்பந்துக்கு களங்கம் விளைவிப்பதாக மெக் சிகோ பயிற்றுவிப்பாளர் ஒசோரி யோ கண்டனம் தெரிவித்தார். இது ஒருபுறம் இருக்க, வெற்றி பெற்ற பிரேசில் காலிறுதியில் பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது. பிரேசிலின் ஜம்பம் பெல்ஜியத்திடம் பலிக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.