போலிக் கடப்பிதழ் மூலம் கனடா செல்ல முயற்சி: 19 பேர் கைது

சென்னை: போலிக் கடப்பிதழைப் பயன்படுத்தி சென்னையில் இருந்து கனடா செல்ல முயன்ற 19 பேர் கைதாகினர். நேற்று முன்தினம் குஜராத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 19 பேர் ஒரே குழுவாக கனடா செல்லும் பொருட்டு சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர். அவர்களுடைய கடப்பிதழ் மற்றும் விசாக்களை ஆய்வு செய்தபோது அனைத்தும் போலியானவை என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து 19 பேரின் பயணம் ரத்தானது. பின்னர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கனடா செல்வதாக அவர்கள் தெரிவித்தனர். எனினும் ஒவ்வொருவரும் ரூ.2 லட்சம் கொடுத்து போலிக் கடப்பிதழ் பெற்று கனடா செல்ல இருப்பது விசாரணையில் அம்பலமானது.

மேலும் செய்திகள்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!