ஜகார்த்தா: இந்தோனீசியாவில் நேற்று நிகழ்ந்த படகு விபத்தில் மாயமான 130 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள் ளது. நேற்று மாலை நிலவரப்படி படகு விபத்தில் ஆறு பேர் பலி யானதாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. 139 பேருடன் சென்ற படகில் நீர் புகுந்ததால் படகு கவிழ்ந்த தாக இந்தோனீசிய போக்கு வரத்து வாரியம் தெரிவித்தது. மேலும் படகில் இருந்த மற்ற வாகனங்களும் அலையில் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் அச்செய்தி குறிப்பு தெரிவிக்கி றது.
இந்தோனீசியாவின் சுலாவசி தீவில் இருந்து சிலயார் தீவிற்கு படகு சென்று கொண்டிருந்த போது, வீசிய கடும் காற்றாலும் உயரே எழும்பிய அலைகளாலும் படகு விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்து தொடர்பாக வெளியான படம் ஒன்றில், உயிர் பாதுகாப்புக் கவசம் அணிந்த படகுப் பயணிகள் சிலர் தண்ணீ ரில் நீந்தியபடி உதவிக்காக காத் திருப்பது தெரிகிறது. இரு வாரங்களுக்கு முன் சுமார் 164 பேருடன் சென்ற படகு தோபா ஏரியில் கவிழ்ந்தது. இதனால் மாயமானவர்களைத் தேடும் பணியை இந்தோனீசியா நேற்று முன்தினம் நிறுத்தியது.