உண்மைச் சம்பவங்களை மைய மாக வைத்து உருவாகும் படங்க ளின் எண்ணிக்கை தமிழில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உருவாகும் மற்றொரு படம் 'பார்த்திபன் காதல்'. இதில் நாயகன், நாயகி உட்பட பெரும்பாலானோர் புதுமுகங்க ளாம். எஸ் சினிமா என்ற புதிய பட நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. தங்கையா மாட சாமி ஒளிப்பதிவு செய்ய, பில்லா இசை அமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குபவர் வள்ளிமுத்து.
இவர் 'என்னமோ நடக்குது', 'அச்சமின்றி' உள்ளிட்ட படங் களை இயக்கிய ராஜபாண்டியிடம் உதவி இயக்குநராகப் பணியாற் றிய அனுபவம் உள்ளவர். "இந்தப் படத்தில் யோகி என்ற இளையரை நாயகனாக அறிமுகம் செய்கிறேன். கதா நாயகியாக வர்ஷிதா அறிமுக மாகிறார். இது உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி உரு வாகும் படம். அதேசமயம் புதிய களத்தில் இளமை கொஞ்சும் காதல் கதையாக இருக்கும். யோகி ஓவியக் கல்லூரி மாண வராகவும், வர்ஷிதா கிராமத்துக் கல்லூரி மாணவியாகவும் நடிக் கின்றனர். "அண்மைக் காலமாக தமிழ்ச் சினிமாவில் நகைச்சுவை கலந்த பேய்க் கதைகளும், அதிரடிப் படங்களுமாகவே வந்து கொண் டிருக்கின்றன. இந்தச் சூழலில் 'பார்த்திபன் காதல்' ஒரு முழு மையான காதல் கதையாக உரு வாகிறது," என்கிறார் இயக்குநர் வள்ளிமுத்து.
'பார்த்திபன் காதல்' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் யோகி, வர்ஷிதா.