சிஓஇ கட்டணம்: 8 ஆண்டு காணாத வீழ்ச்சி

வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் (சிஓஇ) நேற்று வெளியிடப்பட்ட ஏலக் குத்த கையில் குறைந்தன. அவற்றில், கார்களுக்கான சிஓஇ கட்டணம் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளில் காணப்படாத அள விற்கு குறைந் தது. சிறிய கார்களுக்கான (1,600cc மற்றும் 130bhp வரை) சிஓஇ கட்டணம் $25,000 ஆனது. இதற்கு முந்தைய ஏலக் குத்த கையில் கட்டணம் $34,110ஆக இருந்தது. இது 2010ஆம் ஆண்டு மார்ச் மாதத்தைத் தொடர்ந்து ஆகக் குறைவான கட்டணம் ஆகும்.

பெரிய கார்களுக்கான (1,600cc மற்றும் 130bhpக்கு மேல்) சிஓஇ கட்டணம் $31,000 ஆனது. முன்னதாக அது $33,900ஆக இருந்தது. மோ ட் டா ர் சை க் கி ள் க ளை த் தவிர்த்து வேறு எந்த வாகனப் பிரிவுக்கும் பயன்படுத்தப்படக் கூடிய பொது சிஓஇ பிரிவுக்கான கட்டணம் $31,001ஆக இருந்தது. இதற்கு முந்தைய ஏலக் குத்த கையில் அது $34,400ஆக இருந்தது. வர்த்தக வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம் $31,092 ஆனது. ஏற்கெனவே இருந்த $32,001ஐவிட அது சற்றுக் குறைவு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!