மனோஜ் பீதா இயக்கத்தில் காதல் கலந்த திகில் படமாக உருவாகியுள்ளது 'வஞ்சகர் உல கம்'. படத்தில் அடிதடி காட்சி களுக்கும் குறைவிருக்காதாம். எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் மனோஜ். இந்தப் படத்தில் புதுமுகம் சிபி நாயகனாகவும், அனிஷா ஆம்ப் ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். நடிகர் குரு சோமசுந்தரம் ரவுடிக் கும்பலின் தலைவனாக நடித்திருக்கிறார். மேலும் சிபி புவனச்சந்திரன், ஹரேஷ் பெரடி, விஷாகன் ஜான் விஜய், வாசு விக்ரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற் றுள்ளனர். சாம்.சி.எஸ். இசை யமைத்திருக்கிறார்.
இதில் செய்தி சேகரிக்கும் போது ஒரு கொடூரமான சூழ் நிலையில் சிக்கிக்கொள்ளும் சம்யுக்தா என்ற பத்திரிகையாள ரின் பாத்திரத்தில் நடித்துள்ளாராம் நாயகி அனிஷா. அதிலிருந்து மீண்டுவர படாதபாடு படுவாராம். "இப்படத்தின் திரைக்கதை 'ஹைப்பர்லிங்க்' பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இது ஒரே நேரத்தில் நடக்கும் பல்வேறு கதைகள், அதன் கதா பாத்திரங்களைக் கொண்ட பட மாக உருவாகியிருக்கிறது.
படப்பிடிப்பு தளத்தில் 'வஞ்சகர் உலகம்' படக்குழுவினர்.