பேங்காக்: தாய்லாந்து குகைக்குள் கடந்த 10 நாட்களாக சிக்கியுள்ள காற்பந்துக் குழு உறுப்பினர்களான 12 சிறுவர்களும் அவர்களின் பயிற்றுவிப்பாளரும் பத்திரமாக ஓரிடத்தில் இருப்பது கண்டுபிடிக் கப்பட்டதைத் தொடர்ந்து அவர் களைப் பாதுகாப்பாக வெளியில் கொண்டுவரும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்கள் அடங்கிய ஒரு குழுவினர் 24 மணி நேரமும் அந்த 13 பேரையும் கவனித்து வருகின்றனர். தாம் லுவாங் குகைக்குள் காணப்படும் ஒரு சிறிய மேட்டுப் பகுதியில் அந்த 13 பேரும் பத்திரமாக இருப்பதை ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான புகைப்படம் காட்டியது. அந்தக் குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களில் சிலருக்கு ஏற்பட்ட சிறு காயங் களுக்கு தாய்லாந்து ராணுவத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் ஒருவர் மருந்து போடுவதும் ஃபேஸ்புக் காணொளியில் தெரிகிறது.
போர்வைகளைப் போர்த்தியபடி குகைக்குள் பத்திரமாக இருக்கும் காற்பந்துக் குழுவைச் சேர்ந்த சிறுவர்கள். படம்: ஃபேஸ்புக்