கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது கோலாலம்பூர் நீதிமன்றத்தில் நேற்று நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட வேளையில் நீதி மன்றத்திற்கு வெளியில் கூடி யிருந்த நஜிப்பின் ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி டோமி தாமஸ் வலுக்கட்டாயமாக செய்தியாளர் கள் கூட்டத்தை ரத்து செய்ய நேர்ந்தது. செய்தியாளர் கூட்டத்தில் திரு தாமஸ் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கியபோது மலாய் மொழி யில் பேசுமாறு நஜிப்பின் ஆதர வாளர்கள் கூச்சல் போட்டனர். ஆதரவாளர்களின் ரகளையால் திரு தாமஸ் தொடர்ந்து பேச முடியாத நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது பாதுகாப்பு கருதி பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
அமளியில் ஈடுபட்ட நஜிப் ஆதரவாளர்களை அமைதிப்படுத் தும் முயற்சியில் போலிசார் ஈடு பட்டதாகவும் ரகளையில் ஈடுபட்டவர்களில் சிலரது அடை யாள அட்டைகளை போலிசார் எடுத்துச் சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பாதியில் தடைபட்ட செய்தியாளர்கள் கூட்டம் பின்னர் நீதிமன்ற கட்டடத் திற்குள் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய திரு டோமி தாமஸ், செய்தியாளர் களிடமிருந்து கேள்விகளை எதிர்பார்த்திருந்த நேரத்தில் நஜிப் ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபடுவார்கள் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் இது தனக்கு வியப்பாக உள்ளது என்றும் கூறினார்.