மாஸ்கோ: உலகக் கிண்ணப் போட்டிகளில் இதற்குமுன் மூன்று முறை பெனால்டி வாய்ப்புகளை எதிர்கொண்டபோதும் அவற்றில் ஒருமுறைகூட வெல்லாமல் அடைந்த ஏமாற்றத்திற்கு, நேற்று அதிகாலை மருந்து தேடிக் கொண்டது கிண்ணத்தைக் கைப்பற்றும் கனவுடன் களம் இறங்கி இருக்கும் இங்கிலாந்து அணி. கொலம்பிய அணிக்கெதிரான காலிறுதிக்கு முந்திய சுற்று ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் பெனால்டி மூலம் கோலடித்து தமது அணியை முன்னிலை பெறச் செய்தார் இங்கிலாந்து அணித்தலைவர் ஹேரி கேன். நடப்புத் தொடரில் அவர் அடித்த ஆறாவது கோல் இது.<ப்> ஆட்டம் 90 நிமிடங்களைக் கடந்தும் அதே நிலை நீடித்ததால் இங்கிலாந்து அணி வெல்வது உறுதி எனக் கருதப்பட்டது. அந்தத் தருணத்தில் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார் 1.94 மீட்டர் உயரம் கொண்ட கொலம்பியத் தற்காப்பு வீரர் யெரி மினா. கார்னரில் இருந்து வந்த பந்தை அவர் தலையால் முட்டி வலைக்குள் தள்ளி ஆட்டத்தைச் சமன்படுத்தினார்.
பெனால்டி வாய்ப்புகளில் கொலம்பிய அணியின் இறுதி முயற்சியைத் தடுத்து இங்கிலாந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற கோல்காப்பாளர் ஜோர்டன் பிக்ஃபர்ட். படம்: ராய்ட்டர்ஸ்