ரோவர் யாத்திரை சென்று நேப் பாளத்தில் சிக்கித் தவித்து வந்த மேலும் 96 இந்தியப் பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். நேப்பாளத்தில் மோசமான பருவ நிலை காரணமாக இந்தியா வின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற பக்தர்கள் 1,500 பேர் நேப்பாளத்திலும் சீனாவின் திபெத்திய பகுதியிலும் பரிதவித்து வருகின்றனர். மழை காரணமாக பல இடங் களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட் டுள்ளது. இதையடுத்து, அங்கு சிக்கித்தவிக்கும் பயணிகளை மீட்க வெளியுறவுத்துறை நட வடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று, நேப்பாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 7 சிறிய ரக விமானங்களை அந்நாட்டு அரசு அனுப்பிவைத்தது. சிமிகோட், ஹில்சா பகுதிகளில் இருந்து 143 இந்திய பக்தர்கள் நேற்றுமுன்தினம் பத்திரமாக மீட் கப்பட்டனர். இவர்களில் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தீனதயாளன் என்பவர் உள்பட 19 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதற்காக 7 சரக்கு விமானங் கள் பயன்படுத்தப்பட்டதாக இந்தி யத் தூதரக அதிகாரிகள் தெரி வித்தனர். இந்நிலையில், கர்னாலி மாகா ணத்தில் அமைந்துள்ள சர்கெட் எனும் பகுதியில் சிக்கித்தவித்த 96 இந்திய பக்தர்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளனர். மற்ற பக்தர் களை மீட்கும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருவ தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உணவு, முத லுதவி சிகிச்சைகள் அளிக்கப் பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில் நேப்பாளத்தில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க பிரதமர் மோடி உத்தரவிட் டுள்ளார். தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட் டுள்ளார்.