ஹைதராபாத்: தெலுங்கானாவில் வெடிபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென்று ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 10 பேர் உயிரிழந்தனர். கடும் காயமடைந்த மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள தாகவும் அவர்கள் வாரங்கல்லில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. "தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தில் பத்ரகாளி வெடிபொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் நேற்று காலை 11 மணிக்கு இந்த வெடிப்பு ஏற்பட்டது. இதில் 10 பேர் கொல் லப்பட்டனர்.
"விபத்து நேர்ந்தபோது கிடங் கில் 15 பேர் பணியில் ஈடுபட் டிருந்தனர். அவர்களில் இருவரின் நிலைமை என்ன ஆனது என்று இன்னும் தெரியவில்லை. "உயிரிழந்தவர்களில் பெரும் பாலோர் பெண்கள். ஒரு சிறுவனும் இறந்துவிட்டான்," என்று போலி சார் தெரிவித்தனர். காசிபுக்கா வட்டாரத்தில் அமைந்துள்ள பத்ரகாளி வெடி தொழிற்சாலையில் விபத்து நேர்ந் தது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால் மின்சாரக் கசிவால் விபத்து நேர்ந் திருக்கலாம் என்று போலிசார் சந்தேகிப்பதாக உள்ளூர் ஊட கங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தத் தொழிற்சாலையை நடத்தி வந்த குல்லாபெல்லி ராஜ்குமார் என்பவரை போலிசார் தேடி வருகின்றனர்.
வெடிவிபத்து நேரிட்டதும் அங் கிருந்த வெடிபொருட்கள் வெடித் துச் சிதறி வெடி தொழிற்சாலைக் கட்டடம் தரைமட்டமானது. தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு தூக்கிச் செல்கின்றனர். படம்: ஏஎஃப்பி