தரையிலிருந்தவாறே விமானங் களின்மீது கணைகளைப் பாய்ச்சி வீழ்த்தும் 'பைத்தன்=5', 'டெர்பி' (ஸ்பைடர்) ஆகிய புதிய விமான தற்காப்பு சாதனங்கள் முழுமை யாக இயங்க உள்ளன. 2011ல் அறிமுகம் செய்யப்பட்ட அந்த சாதனங்கள், 'ஐஏடி' எனப்படும் மேம்பட்ட தீவு தற்காப்பு அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்ட முதலாவது அதிநவீன ஆயுத முறையாக உள்ளது. இதற்கு முன்னர், 'ரேப்பியர்' சாதனம் கடந்த 30 ஆண்டு களாக சிங்கப்பூர் ஆயுதப் படையில் பயன்படுத்தப்பட்டு வந்தது. புதிய சாதனத்தால் அதிக தூரத்திற்கு கணைகளைப் பாய்ச்ச முடியும்.
தரையிலிருந்து விமானங்களைக் குறிவைத்து கணைகளைப் பாய்ச்சும் 'பைத்தன்-5', 'டெர்பி'. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்