முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், 64, நீதிமன்றத்தில் தம் மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டு களையும் மறுத்துள்ளார். தாம் களங் கமற்றவன் என்பதை நிரூபிக்கப் போவதாகவும் அவர் -கூறியுள்ளார். நேற்று முன்தினம் கைது செய் யப்பட்ட திரு நஜிப் மீது நேற்றுக் காலை கோலாலம்பூர் உயர் நீதி மன்றத்தில் 1எம்டிபி மோசடியுடன் தொடர்புடைய மூன்று நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளும் அதி காரத்தை சொந்த நலனுக்குப் பயன் படுத்திய ஒரு குற்றச்சாட்டும் சுமத் தப்பட்டன. அவருக்காக வாதாட முஹம்மது ஷஃபீ அப்துல்லா தலைமையில் ஏழு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பின் னர் 1 மில்லியன் ரிங்கிட் ($337,000) பிணையில் நஜிப் விடுவிக்கப்பட்டார். சொந்த, அரச தந்திர கடப்பிதழ்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு நஜிப்புக்கு நீதிமன்றம் உத்தர விட்டது. பிணையில் விடுவிக்கப் பட்ட நஜிப், தம் மீது சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைக்க இருப்பதாக உறுதி பூண்டார்.
நீதிமன்றத்திற்கு வெளியே செய்தி யாளர்களிடம் பேசிய திரு நஜிப், "நான் குற்றமற்றவன் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. "கடுமையாகக் குற்றம் சாட்டப்பட் டதன் மூலம் எனது பெயருக்கு ஏற் படுத்தப்பட்ட களங்கத்தைத் துடைக்க நீதிமன்ற விசாரணை நல்லதொரு வாய்ப்பு. என் மீதான வழக்கில் சட்ட விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கப் படும் என்று நம்புகிறேன்," என்று கூறினார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட நஜிப் ரசாக்கை நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களும் ஆதரவாளர்களும் சூழ்ந்துகொண்டனர். பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பத்திரமாக அனுப்பிவைத்தனர். படம்: ஏஎஃப்பி