சிங்கப்பூரின் புதிய நிறுவனம் ஒன்று, வழக்கமான 'பாலிமர்', சிராமிக் தண்ணீர் வடிகட்டியை விட ஐந்து மடங்கு சக்திவாய்ந்த கழிவு நீரை வடிகட்டும் சவ்வை (Membrane) உருவாக்கி உள்ளது. நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகத்தின் ஆதரவில் தொடங்கப்பட்ட 'நானோ சன்' என்ற நிறுவனம் நேற்று முப்பரி மாண அச்சு தொழிற்சாலையைத் தொடங்கியது. அப்போது புதிய சவ்வு பற்றிய அறிவிப்பையும் அது வெளியிட் டது. ஒவ்வொரு நாளும் 600 சதுர மீட்டர் அளவுக்கு புதிய வடிகட்டியை தமது தொழிற்சாலை யால் தயாரிக்க முடியும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
இது, ஆறு நான்கறை வீடுகளின் அளவுக்கு ஈடானது. செய்தியாளர்களிடம் பேசிய நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக் கழகத்தின் இணைப் பேராசிரியரான டேரன் சன்னும் அவரது குழுவினரும் ஒரு சரா சரியான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்குத் தேவையான புதிய சவ்வை 18 நாட்களில் தயாரிக்க முடியும் என்று தெரி வித்தனர். பாரம்பரியமான நீர் வடி கட்டியைத் தயாரிக்க 13 நடை முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால் 'நானோ சன்' முப்பரிமாண அச்சு இயந்திரத்தில் ஒரே நடைமுறையில் சவ்வைத் தயாரித்துவிட முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.