அடுத்த சில ஆண்டுகளில் மின் சக்தியில் இயங்கும் கார் பந்தயப் போட்டியை சிங்கப்பூரில் எதிர் பார்க்கலாம். இது குறித்து கார் பந்தயப் போட்டி ஏற்பாட்டாளருடன் அர சாங்கம் பேச்சு நடத்தி வருகிறது. இந்தப்பேச்சு வெற்றிகரமாக அமைந்தால் வரும் 2020யில் மின்சக்தியில் இயங்கும் 'ஃபார் முலா இ' எனும் கார்ப் பந்தயப் போட்டி சிங்கப்பூரில் நடைபெறுவது உறுதி. ஆனால் வர்த்தக, தொழில் அமைச்சும் சிங்கப்பூர் பயணத் துறைக் கழகமும் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் இது பற்றி இன்னமும் முடிவு எடுக்கப்பட வில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிங்கப்பூரின் விளையாட்டுப் போட்டிக் களத்தைத் துடிப்புடன் வைத்திருக்கவும் பொழுது போக்குக்குச் சிறந்த இடமாக சிங் கப்பூரை மேம்படுத்தவும் பல்வேறு நிகழ்ச்சிகளை சிங்கப்பூருக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப் பட்டு வருகின்றன என்று அறிக் கையில் பயணத்துறைக் கழகம் சுட்டிக்காட்டியது. சிங்கப்பூரில் ஏற்கெனவே 'ஃபார்முலா ஒன்' கார்ப் பந்த யத்தை நடத்தும் 'சிங்கப்பூர் ஜிபி'யும் புதிய வழித் தடங்களை சேர்ப்பது குறித்து அரசு அதி காரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
இம்மாதம் 10ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற 'ஃபார்முலா இ' கார்ப் பந்தயப் போட்டி. கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்