சென்னை: ரயில்வே, சுற்றுலா ஆகிய துறைகளின் (IRCTC) இணையத் தளங்களில் இந்தி மொழி திணிக் கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சுக்கு கன்னியாகுமரி மாவட்ட இரயில் பயணியர் சங் கம் அனுப்பியுள்ள கடிதத்தில், நுகர்வோர் உரிமைகள் பாதுகாக் கப்பட வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது. ஐஆர்சிடிசி எனப்படும் இந் திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையத் தளம் மூலம் இரயில் பயணச் சீட்டுகளைப் பதிவுசெய்ய முடி யும். இந்த இணையத் தளத்தில் ஆங்கிலமும் இந்தியும் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
நாட்டின் பிற வட்டார மொழிகளுக்கு உரிய வாய்ப்பு தரப்பட வில்லை என பயணியர் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. "ஐஆர்சிடிசி இணையத் தளத் தில் இந்தி மொழி பல்வேறு வழிகளில் திணிக்கப்படுகிறது. இந்தி பேசும் மக்கள் அம்மொழி யில் உருவாக்கப்பட்டுள்ள இணையத் தளத்தைச் சுலபமாகப் பயன்படுத்த இயலும். "இந்நிலையில் ஆங்கிலத்தில் அமைந்த இணையத் தளத்திலும் இந்தியைத் திணிப்பது தேவை யற்றது. இந்த இணையதளம் ரயில் பயணிகளுக்கு பயணச் சீட்டு வழங்குவதற்காக உருவாக் கப்பட்டது. "இதில் இந்தி மொழியை ஊக்குவிப்பது ஐஆர்சிடிசியின் வேலை அல்ல," என ரயில் பய ணியர் சங்கம் மேலும் தெரிவித் துள்ளது. 2018-07-06 06:00:00 +0800