ஊபர் நிறுவனத்தின் தென் கிழக்காசிய வர்த்தகத்தை கிராப் கையகப்படுத்தியது, போட்டித் தன்மை தொடர்பான சட்டங் களுக்குப் புறம்பானது என்று சிங்கப்பூர் வணிகப் போட்டித் தன்மை, ஆணையம் முடிவு செய்திருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஊபரின் சிங்கப்பூர் வர்த்தகத்தை கிராப் வாங்கிய நடவடிக்கையின் மூலம் அவ்விரு நிறுவனங்களுமே போட்டித்தன்மை தொடர்பிலான சட்டத்தை மீறியிருப்பதாக ஆணை யம் அவற்றுக்குக் கடிதத்தின் வழி தெரிவித்தது. இரு நிறுவனங்களுக்கு இடையிலான அந்த ஒப்பந்தம், சிங்கப்பூரின் தனியார் போக்கு வரத்துத் துறையின் போட்டித் தன்மையை வெகுவாகக் குறைத் திருப்பதாக ஆணையம் தற் போதைக்கு உறுதி செய்து உள்ளது.
வாடகை வாகனச் சேவைத் துறையில் டாக்சி போட்டித் தன்மையை ஏற்படுத்து வதில்லை என்றது ஆணையம். வாகன வாடகைச் சேவைத் துறையில் நிறுவனங்கள் நுழைவ தற்கு அதிக தடங்கல்கள் இருப்பதால் ஆணையத்தின் தலை யீடு இன்றி அந்தத் துறையில் நிறுவனங்கள் எளிதாக நுழைய முடியாமல் திணறும் என்று அது கூறியது. போட்டி நிறுவனங்கள் ஏதுமின்றி கிராப், தனது விருப்பத்திற்கு ஏற்ப, சேவைக் கட்டணத்தை உயர்த்தி, சேவைத் தரத்தைக் குறைத்துவிட முடியும் என்றும் ஆணையம் சொன்னது. கிராப்=ஊபர் இணைப்பைத் தொடர்ந்து, வாடிக்கையாளர் களிடம் இருந்தும் ஓட்டுநர்களிடம் இருந்தும் உயர்த்தப்பட்ட கட்ட ணங்கள் தொடர்பில் புகார்களைப் பெற்றுள்ளதாக ஆணையம் கூறியது.